கே.ஜி.எஃப் 2-வை தொடர்ந்து யாஷ் நடிக்கும் அடுத்த படம்- வெளியானது புதிய அறிவிப்பு..!

 
யாஷ்

கன்னட மொழியில் தயாராகி வரும் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியாகி இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கன்னடம் படம் யாஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை குவித்தது.

இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். அதனால் இந்தியளவில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கே.ஜி.எஃப்  2 படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎஃப் கதாநாயகன் யாஷ் நடிக்கும் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் யாஷ் அடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நேரடியாக தயாராகவுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளன. 
 

From Around the web