சமந்தாவை தொடர்ந்து கணவரின் பெயரை நீக்கிய பிரபல நடிகை..!!

 
1

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைத்தேர்ந்தவர். அதன்பிறகு ஹாலிவுட் பக்கம் சென்று கலக்கி வருகிறார். அங்கேயே தன்னை விட 10 வயது குறைந்த பிரபல பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தனது புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிடுவார். திருமணத்திற்கு பிறகு சமூக வலைதள கணக்குகளில் தன் பெயருடன் ஜோனஸ் என்கிற பெயரையும் சேர்த்தார் ப்ரியங்கா. இந்நிலையில் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தன் கணவரின் பெயரான ஜோனஸை நீக்கிவிட்டார்.

ப்ரியங்காவும், நிக் ஜோனஸும் பிரியப் போகிறார்கள் போன்று. அதனால் தான் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஜோனஸை நீக்கிவிட்டார். சமந்தா கூட தன் கணவர் நாக சைதன்யாவை பிரியும் முன்பு சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனியை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1
 

From Around the web