மலரும் நினைவுகள்... விஜயுடன் ஸ்கூட்டியில் சென்ற இயக்குனர் ஷங்கர்..! 

 
1

ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பிரம்மாண்டமாகவே காணப்படும். ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்.

அந்த வகையில் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படம் தான் நண்பன். இந்த படம் தமிழில் ஹிட்டடித்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற காமெடிகளும் சரி எமோஷனல் காட்சிகளும் சரி பாடல்களும் கூட இன்றளவில் மட்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதில் ஒரு காட்சி தான் ஜீவாவின் அப்பாவை ஸ்கூட்டியில் மருத்துவமனையில் அனுமதிக்கும் காட்சி.

அதாவது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஜீவாவின் தந்தையை ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் அதில் கதாநாயகியாக காணப்பட்ட இலியானாவில் ஸ்கூட்டியில் வைத்து அழைத்துச் செல்லுவார் விஜய். இந்த காட்சிக்கு திரையரங்குகளில் கைதட்டல்களும் விசில்களும் பறந்தன.

இந்த நிலையில், இந்த காட்சியின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அசத்தலான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஸ்கூட்டியில் விஜய் ஜீவாவின் தந்தையாக நடித்த நபருக்கு பின்னால் சங்கர் இருந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.

மேலும் சினிமா செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்

From Around the web