என்னை பொருத்தவரை சூப்பர்ஸ்டார் என்பதை விட
 

 
1

தமிழ் மட்டுமின்றி தேசிய அளவில் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் அறியப்படுகிறார். இவர் தவிர மலையாள சூப்பர்ஸ்டார்களாக மம்முட்டி, மோகன்லால், இந்தியில் ஷாருக், சல்மான், அமீர்கான் ஆகியோரை குறிப்பிட முடியும்.

சமீபத்தில் தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற தலைப்பு மிகப்பெரும் விவாதமாக மாறியது. இது தொடர்பான சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “சூப்பர்ஸ்டார்டம் யாருக்கும், எதுவும் தராது. அது நேர விரயம் மட்டும் தான். சூப்பர்ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் யாருக்காவது பயன் ஏற்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை.”

“சூப்பர்ஸ்டார் பட்டம் இமேஜை கொடுக்கிறதா என்றும் தெரியவில்லை. என்னை பொருத்தவரை சூப்பர்ஸ்டார் என்பதை விட சூப்பர் ஆக்டர் என்று சொல்வதே எனக்கு மகிழ்ச்சி. மலையாளத்தின் மூன்று சூப்பர் ஆக்டர்களாக பகத் பாசில், ஆசிப், ரீமா கல்லிங்கல் ஆகியோர் உள்ளனர்,” என்று தெரிவித்தார்.

From Around the web