முதல் முறையாக மணிகண்டன் வில்லனாக நடிக்கும் “மத்தகம்” வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியானது..!

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள சீரிஸ் “மத்தகம்”.இதில் நடிகர் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட ட்ரைலரில் அதர்வா மற்றும் மணிகண்டனின், இதயம் அதிரச்செய்யும் ஆக்சன் அதிரடியில், ஒரு அட்டகாச பொழுதுபோக்கை இந்த சீரிஸ் தரும் என்பதை உறுதி செய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.
சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “குட் நைட்” திரைப்பட கதாநாயகன் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மை மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த சீரிஸில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.