ஆஸ்கரில் பங்கெடுத்த தீபிகாவுக்கு வெளிநாட்டு ஊடகங்கள் அவமரியாதை..!

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஸ்கர் விழாவில் பங்கெடுத்த தீபிகா படுகோனேவுக்கு வெளிநாட்டு ஊடகங்கள் அவமரியாதை செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்தியா சார்பில் போட்டியிட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தை அறிமுகம் செய்வதற்காக தீபிகா படுகோன் சென்றிருந்தார். அந்த விழாவுக்காக தீபிகா அணிந்திருந்த ஆடை மற்றும் அலங்காரம் உலகளவில் கவனமீர்த்தது.
இந்நிலையில் தீபிகா படுகோன் ஆஸ்கர் விழாவில் பங்கெடுத்த போது, அவருக்கு உலகப் புகழ் பெற்ற ஊடகங்கள் பல அவமரியாதை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கரில் தீபிகாவின் பங்களிப்பு தொடர்பாக அடுத்தநாள் செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் பல அவரது பெயரை மாற்றி பிரசுரித்துள்ளன.
"Do you know Naatu? Because if not, you're about to."
— LetsCinema (@letscinema) March 13, 2023
- Queen Deepika Padukone announces ‘Naatu Naatu’ live performance at the #Oscars
pic.twitter.com/T6q2ZGKTO0
இந்தி சினிமா நடிகை தீபிகா படுகோனேவை, பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் கமிலா ஆசல்வ்ஸ் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற வோக் பத்திரிக்கையும் தீபிகாவின் பெயரை மாற்றி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தீபிகா இதுவரை எந்த மறுமொழியும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.