விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ரஜினியின் முன்னாள் கதாநாயகி..!

 
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரஜினியின் முன்னாள் கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் கணவன், மனைவி இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்ப்டாம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் தற்போது இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

தமிழில் மாதவன் நடித்த வேடத்தில் சையிப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளனர். அதேபோல மாதவனுக்கு ஜோடியாக தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். குமுதவல்லி என்கிற அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதை தொடர்ந்து இந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 

From Around the web