விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் மோதும் நான்கு வில்லன்கள்..!

 
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் கமல்ஹாசன் ஒருப்பக்கம் சினிமாவிலும் பரபரப்பாக உள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள கமல், அடுத்ததாக பாபநாசம் இரண்டாம் பாகத்திலும், வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியால் விக்ரம் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மொத்தம் 4 வில்லன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மலையாள நடிகர் ஃபகத் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார். இதற்கிடையில் படக்குழு விஜய்சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கதைப்படி படத்தில் கமல்ஹாசன் தாதாவாக நடிக்கிறார். அவரை எதிர்க்கும் நான்கு வில்லனுக்கு படத்தில் முக்கிய பங்கு இருக்குமாம். அதனால் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முக்கிய நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

நடிகர் நரேன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்துள்ளார். அதேபோல நடிகர் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனால் நரேன் மற்றும் விஜய் சேதுபதியை வில்லனாக மாற்றுவதில் லோகேஷ் கனகராஜுக்கு பெரிய சிரமம் இருக்காது என்று கூறப்படுகிறது.

From Around the web