மாப்பிள்ளை என்ற பெயரில் மோசடி... 50 சவரன் நகையை இழந்த சீரியல் நடிகை..!
சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருக்கும் வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிபிரியாக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இவருக்கு நலங்கு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார் துநேசன். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதையெல்லாம் தெரிந்து தான் ஜெனிபிரியா அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த திருமணம் திடீரென நின்று போய்விட்டதாகவும் மாப்பிள்ளை வீட்டாரிடம் 50 சவரன் நகை கொடுத்து குறித்த நடிகை ஏமாந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு 200 சவரன் நகை வரதட்சனை கேட்ட நிலையில் 100 சவரன் போடுகின்றேன் என்று ஜெனி பிரியா வீட்டார்கள் கூறியுள்ளார்கள். சமீபத்தில் சென்னைக்கு வந்த துநேசன் குடும்பத்தினர் 100 சவரன் நகைகளை கொடுங்கள் இப்போது சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்கின்றோம் திருமண நேரத்தில் கொண்டு வந்தால் கஷ்டம்ஸ் பிரச்சினை வரும் என்று கூறியதாக தெரிகின்றது. இதை நம்பிய ஜெனிபிரியா அவர்களிடம் 50 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துள்ளார்.
அதன்பின்பு மாப்பிள்ளை குடும்பத்தார் நடவடிக்கையில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. ஒருமுறை சிங்கப்பூருக்கு வரவழைத்து ஜெனிபிரியாவின் பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து அனுப்பியதாகவும் நகைகளை கேட்டதற்கு நீ நகைகளை கொடுக்கவில்லை என்று கூறி அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்கள். இதை தொடர்ந்து சென்னை திரும்பிய ஜெனிபிரியா சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.