விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்..!!

 
1

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தான் அரசியலுக்கு வரப்போவதை மறைமுகமாக காட்டி வரும் தளபதி விஜய் அண்மையில் நடைபெற்ற லியோ வெற்றிவிழாவில் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திருந்தார்.இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் தமிழ்நாட்டின் அடுத்த CM நீங்க தான் தளபதி என அவரது ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீப காலமாக தளபதி விஜயின் இந்த களப்பணி உங்களுக்கு பிடித்திருக்கிறதா அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா ஒரு வேலை அரசியலுக்கு வந்தால் மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதுடன் புதிய வளமான தமிழகத்தை உருவாகுவரா உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிருங்கள் மக்களே….

From Around the web