ஜெயிலர் ஆடியோ லான்ஞ்க்கு இலவச பாஸ்கள்! எப்படி பெறுவது தெரியுமா ?

 
1
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் ஜெயிலர் .இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கிறார். முன்னதாக இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அதனைத்தொடர்ந்து வெளியான ‘காவாலா’ பாடலும் எகிடுதகிடு ஹிட்டடித்தது.

அடுத்ததாக வெளியான ‘Hukum’ பாடலும் பம்பர் ஹிட்டடித்தது. இந்த நிலையில்தான் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா அப்டேட் வெளியானது. அதன் படி இந்த விழாவானது வருகிற 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனை அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 1000 இலவச பாஸ்களை வழங்க முன் வந்திருக்கிறது. அதன்படி ஒருவருக்கு 2 பாஸ்கள் வீதம் மொத்தமாக 500 பேருக்கு இந்த பாஸ்கள் விநியோகிக்கப்பட இருக்கின்றன. இதற்கான முன்பதிவானது இன்று மதியம் 1 மணிக்கு தொடங்க இருக்கிறது. உங்களுக்கு பாஸ் வேண்டும் என்றால் நாளை மதியம் HTTP://JAILER.SUNPICTURES.IN/ என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம்.


 

From Around the web