சின்னத்திரை டூ வெள்ளித்திரை... ஹீரோயின் ஆகிறார் ‘மகாநதி’ சீரியல் நடிகை..!
சின்னத்திரையில் அறிமுகமான பல நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் திரையுலகிலும் ஜொலித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்டவர்கள் தற்போது முன்னணி நடிகைகளாக இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.
அந்த வகையில் ‘மகாநதி’ சீரியலில் நடிகை பார்த்திபா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவருக்கு தற்போது மலையாள படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் பார்த்திபா இதற்கு முன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவர் ஹீரோயின் ஆக நடிக்கிறார் என்பதும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்து ஆனதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ’மகாநதி’ தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடரில் கங்கா என்ற கேரக்டரில் நடிகை பார்த்திபா நடித்து வந்த நிலையில் திடீரென அவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் அவருக்கு பதிலாக தற்போது திவ்யா என்பவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மகாநதி சீரியல் இருந்து விலகும் போது அவர் மேல் படிப்பு படிக்க போகிறார் என்று கூறிவந்த நிலையில் தற்போது அவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் திரை உலகில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்னத்திரை போலவே திரையுலகிலும் வெற்றி பெற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.