புஷ்பா படத்துக்கு தேதி குறித்த படக்குழு- முழு விபரம் உள்ளே..!

 
புஷ்பா திரைப்படம்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் புஷ்பா திரைப்பட வெளியீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படம் செம்மரக் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநராக நடித்துள்ளார் அல்லு அர்ஜுன். முன்னதாக படத்தின் முதல் பார்வை கிளம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் தயாராகிறது.

தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக தயாராகும் இந்த படம் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் புஷ்பா படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படம் மொத்தம் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web