'அண்ணாத்த’ படத்தின் முதல் நாள் வசூல்- முழு விபரம்...!!

 
அண்ணாத்த திரைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் தெரியவந்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தியாவிலு உலகளவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேநிலை தொடர்ந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இப்படத்தின் வசூல் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web