பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு அடித்த ஜாக்பாட்- முழு விபரம் உள்ளே..!
 

 
சம்யுக்தா

பிரபல மாடலும், சின்னத்திரை பிரபலமுமான சம்யுக்தா முன்னணி நடிகர் ஒருவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் என்பவருடைய இயக்கத்தில் சசிகுமார் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இன்னும் பெரியடப்படாத இப்படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த சம்யுக்தா நடிக்கிறார். அவரும் படக்குழுவினருடன் பூஜையில் பங்கேற்றார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லஷ்மன் குமார் தயாரிக்கிறார்.

நடிகர் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்’ படத்தையும் இவர் தான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சசிகுமார், சம்யுக்தா இணைந்து நடிக்கும் இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் சம்யுக்தா கதாநாயகியா என்பது தெரியவில்லை. எனினும், அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது. இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.
 

From Around the web