எஞ்சாயி எஞ்சாமி பாட்டுக்கு நடனமாடிய நிறைமாத கர்ப்பிணி நடிகை..!

 
எஞ்சாயி எஞ்சாமி பாட்டுக்கு நடனமாடிய நிறைமாத கர்ப்பிணி நடிகை..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பகல்நிலவு தொடரில் நடித்து வந்த சமீரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துகொண்டு எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீரா தமிழில் ஒளிப்பரப்பாகி வந்த ‘பகல்நிலவு’ தொடரில் நடித்து வந்தார். அப்போது பழக்கமான அன்வர் என்பவரை காதலித்து வந்தார். அண்மையில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.

சமீபத்தில் நடிகை சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய யூ-ட்யூப் வலை தளம் மூலம் அறிவித்தார். இந்நிலையில் உலகளவில் ஹிட்டடித்து வரும் எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு ஹெவி மூவ்மெண்டுகள் கொடுத்து அவர் நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

From Around the web