ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி- தல... தல தான்..!

 
ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி- தல... தல தான்..!

கொரோனா பிரச்னையால் சினிமா தொழில் முடங்கியுள்ள சூழலில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் அஜித்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதனுடைய தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ள சூழலில், பெரிய இன்னல்களுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளன. இதனால் சினிமா தொழில் முடங்கியுள்ளது. தினசரி சினிமாவை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உதவும் பொருட்டு நடிகர் அஜித் ஃபெப்சி அமைப்புக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார். இதனால் சமூகவலைதளங்களில் பலரும் நடிகர் அஜித்தை பாராட்டு பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கினார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web