கங்கை அமரன் - இளையராஜா திடீர் சந்திப்பு..!
இசைஞானி இளையராஜாவின் தம்பி ஆன கங்கை அமரனின் மகன்கள் தான் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி. வெங்கட் பிரபு இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் தனது 77வது பிறந்தநாளை கங்கை அமரன் கொண்டாடுகின்றார். இதை முன்னிட்டு தனது அண்ணான இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசிரும் பெற்றுள்ளார். தற்பொழுது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இளையராஜாவுக்கு 80 வயது ஆன போதும் இன்றளவில் மட்டும் சிறந்த பாடல்களை கொடுத்து வருகின்றார். இவரது இசையில் அடுத்து விடுதலை 2 படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு இவர் அமைத்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இவ்வாறான நிலையிலே கங்கை அமரன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபுவும் இதன்போது இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது பலரும் கங்கை அமரனின் பிறந்த நாளுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.