நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் திருமணம்- கங்கை அமரன் தகவல்..!

 
பிரேம்ஜி அமரன்

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் திருமணம் முடித்துவைக்க திட்டமிட்டுள்ளதாக அவருடைய தந்தை கங்கை அமரன் தெரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வருபவர் கங்கை அமரன். இவருக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் வெங்கட் பிரபு முன்னணி திரைப்பட இயக்குநராக உள்ளார். மேலும் அவருடைய இளைய மகன் திரைப்பட பாடகர் மற்றும் நடிகராக உள்ளார். சமீபத்தில் கங்கை அமரனின் மனைவி காலமானார்.

இதனால் குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்துபோனார்கள். துக்க காரியம் நடந்த வீட்டில் சீக்கரம் நல்ல காரியம் நடத்த வேண்டும் என்கிற நடைமுறையை பலரும் பின்பற்றுவது வழக்கம்.

அந்த வகையில் மனைவி இறந்த சோகத்தில் விரைவில் பிரேம்ஜிக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இதுவரை திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக்கொண்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் விரைவில் அவருக்கு ஏற்ற பெண்ணை தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். சீக்கரமே பிரேம்ஜி திருமணம் குறித்த தகவலை வெங்கட் பிரபு அல்லது கங்கை அமரன் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web