‘கங்குவா’ பட ஃபயர் சாங் வெளியானது!
Jul 23, 2024, 14:31 IST

3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் முன்னோட்டம், டீசர் , போஸ்டர்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்நிலையில் சூர்யாவின் 49வது பிறந்தநாளான இன்று (ஜூலை 23) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கங்குவா படத்தின் ஃபயர் சாங் எனும் முதல் பாடல் வெளியாகிய இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். விவேகா பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
அதே சமயம் நடிகர் கார்த்தி இந்த படத்தின் இறுதி சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளார் என்றும் சூர்யாவிற்கு வில்லனாக நடிகர் கார்த்தி கங்குவா 2 படம் முழுவதும் இருப்பார் என்றும் சமீப காலமாக செய்திகள் வெளி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.