கங்குவா பார்ட் 2 பயங்கரமா ரிலீஸாகும் - தயாரிப்பாளர்..!
சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா திரைப்படம் சுமார் 58 கோடிகளை முதல் நாளிலேயே வசூலித்து இருந்தது.
இந்த படம் 38 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருப்பதாக ஏற்கனவே இதன் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.மேலும் இந்த படத்தை வாயை பிளந்து பார்ப்பீர்கள் என சூர்யா படப் பிரமோஷனில் தெரிவித்திருந்தார். ஆனாலும் படத்தை பார்த்த ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனம் அளித்தாலும் இன்னும் சிலர் இந்த படம் முழுக்க சூர்யா கத்திக்கொண்டு இருக்கிறார் லோடு லோடா பஞ்சு கொண்டு போகணும் என்று நெகடிவ் விமர்சனங்களையும் முன் வைத்திருந்தனர்.
அத்துடன் வரலாற்று கதை அம்சம் கொண்டு உருவான இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளை வந்தாலும் அவருடைய கவர்ச்சி ரசிகர்களை கவர்ந்ததாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், கங்குவா படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமா இருக்கு. கேரளா ஆந்திராவில் சூர்யாவின் லைப் டைம் வசூலை இரண்டே நாளில் பண்ணிடும். சூர்யா சார் ரொம்ப சந்தோஷமா இருக்காரு.. கங்குவா பார்ட் 2 இன்னும் பயங்கரமா இருக்கும். அடுத்த வருஷம் அதற்கான வேலைகளை ஆரம்பிப்போம் என கங்குவா படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.