தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த கங்குவா படக்குழு..!

 
1
கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா . ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. எப்படி தெலுங்கில் பாகுபலி, RRR போன்ற திரைப்படங்கள் இந்தியளவில் உருவானதோ அதைப்போல தான் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் இந்தியளவில் தயாராகியுள்ளது. எனவே தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கங்குவா திரைப்படம் இந்தியளவில் வரவேற்பை பெரும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அதே நாளில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வந்ததால் கங்குவா தனது ரிலீஸை தள்ளிவைத்து. அதன் பிறகு நவம்பர் 14 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சூர்யா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இந்தியா முழுவதும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் சூர்யா மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத நிலையில் இப்படத்தை தான் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகியிருக்கும் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும் என்பது தான் படக்குழுவின் இலக்காக உள்ளது. எனவே இப்படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரொமோட் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அண்டை மாநிலங்களாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி ஷோ கிடைத்துள்ளது. அதிகாலை முதல் இப்படத்தை திரையிட மற்ற மாநிலங்களில் அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு அனுமதி இல்லை.

எனவே தமிழக அரசிடம் கங்குவா படக்குழு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்தால் ஒரே நாளில் ஐந்து ஷோக்கள் போடலாம். இதனால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் உயரும். எனவே தான் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்குமாறு கங்குவா படக்குழு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மற்ற எந்த படங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில் கங்குவா படத்திற்கு வழங்குமா என்பது சந்தேகம் தான் என சிலர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web