இன்று மாலை வெளியாகிறது ‘கங்குவா’ பட டீசர்..!!

 
1

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள வரலாற்று படம் தான் கங்குவா.

ஏராளாமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பல ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா நிறைவு செய்த சூர்யா படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

From Around the web