பள்ளியில் படித்த போது என்னிடமும் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன- கவுரி கிஷன்..!

 
கவுரி கிஷன்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96 படத்தில் நடித்த கவுரி கிஷன் பள்ளியில் படிக்கும் போது தனக்கும் பாலியல் மீதான அத்துமீறல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தின் தனியார் பள்ளிக் கட்டமைப்பை குறித்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் 96, கர்ணன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான கவுரி கிஷன் சென்னை அடையாறில் இருக்கும் பிரபல பள்ளியில் படித்த போது பாலியல் தொடர்பான கசப்பான சம்பவங்கள் தனக்கு நடந்துள்ளதாக கூறி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விரிவாக பதிவிட்டுள்ள அவர் மாணவ- மாணவிகளை அசிங்கமாக பேசுவதை, சாதியை வைத்து விமர்சிப்பது, மிரட்டுவது, உருவக் கேளி செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, தவறான குற்றச்சாட்டுக்களை வைத்து மாணவ மாணவியரை தண்டிப்பது உள்ளிட்ட கொடுமைகளை பல ஆசிரியர்கள் நான் படித்த பள்ளியில் செய்துள்ளனர்.

இது எனக்கும் நடந்துள்ளது, என்னுடன் படித்த சக மாணவிகளுக்கும் நடந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை சந்தித்த மாணவிகளின் துயரங்களை நான் அறிவேன். தைரியமாக வெளியே வந்து பிரச்னைகளை தெரிவியுங்கள். உங்களுடைய பெயர் வெளியே வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.

From Around the web