பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் ஊடகங்களுக்கு கவுரி கிஷன் எச்சரிக்கை..!

 
கவுரி கிஷன்

பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்த பதிவை தனக்கு ஏற்பட்டதாக கூறி ஊடகங்களில் செய்தி வெளியானதற்கு நடிகை கவுரி கிஷன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் ரீதியாத அத்துமீறிய குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஆசிரியர் ராஜகோபாலன் மீது 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு தரப்பினர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். 96, மாஸ்டர், கர்ணன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, நடத்தையை கேவலப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஆசிரியர்கள் சிலர் ஈடுபட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ள அவர், நண்பர்களின் கசப்பான அனுபவங்களை தான் பதிவில் குறிப்பிட்டு இருந்ததாகவும், இந்த அனுபவங்கள் தனக்கு நேர்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனக்கு பாலியல் ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை. சர்ச்சையில் சிக்கியுள்ள தனியார் பள்ளியுடன் இணைத்து என்னை தவறாக பேசுவதை ஊடகங்கள் நிறுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web