மம்மூட்டி உடன் நடித்ததும் கவுதம் மேனன் எடுத்த திடீர் முடிவு..!!

மலையாளத்தில் மம்மூட்டி உடன் நடித்த பிறகு இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதுகுறித்து அவரே வெளிப்படையாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
 
 
gautam menon

தமிழில் மின்னலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கவுதம் மேனன், பல ஹிட் படங்களையும் பல ஃபிளாப் படங்களையும் கொடுத்துள்ளார். பெரும்பான்மையாக தமிழில் அவர் படம் இயக்கி இருந்தாலும், கவுதம் மேனன் கேரளாவைச் சேர்ந்தவர். 

இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் படம் இயக்கி உள்ளார். ஆனால் மலையாளத்தில் படங்கள் இயக்கியது கிடையாது. எனினும், அவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மம்மூட்டியுடன் ‘பஜூக்கா’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

mammootty

அந்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட கவுதம் மேனன், மம்மூட்டியுடன் நடித்து அவரிடம் நடிப்புக் கற்றுக்கொள்ள தான் பஜூக்கா படத்தில் நடித்தேன். அவருடன் பணியாற்றிய 10 நாட்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பது ஆச்சரியமாக உள்ளது. அடுத்தாண்டு மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார். 


 

From Around the web