சிவகார்த்திகேயன் படத்தில் கவுதம் மேனன்..?

 
சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இயக்குநர் கவுதம் மேனனை அப்படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் ‘டான்’.சிவகார்த்தியேன், ப்ரியங்கா அருள் மோகன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி, விஜய் டிவி புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

From Around the web