விஜய் ஆண்டனி படத்தில் பாடகராக அறிமுகமாகும் கவுதம் மேனன்..!

 

விஜய் ஆண்டனி நடித்துள்ள ’கோடியில் ஒருவன்’ படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் பாடியுள்ள ’ஸ்லம் ஆந்தம்’ என்கிற பாடல் இன்று வெளியாகவுள்ளது.

மெட்ரோ படத்தின் மூலம் கவனமீர்த்த ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்லம் ஆந்தம்’ என்கிற பாடல் இன்று வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, விஜய் ஆண்டனி, பிரேம்ஜி அமரன், டிரம்ஸ் சிவமணி ஆகியோருடன் இயக்குநர் கவுதம் மேனன் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக கலக்கி வரும் கவுதம் மேனன் ’கோடியில் ஒருவன்’ படத்தில் பாடியுள்ளது கவனமீர்த்துள்ளது.


 

From Around the web