எவ்வளவு கேட்டும் வாயை திறக்காத கவுதம் மேனன்..!!

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதம் மேனனிடம் லியோ படம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் எதுவும் பேசாமல் இருந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
gautam menon

காஷ்மீரில் நடைபெற்று வந்த லியோ பட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  இதையடுத்து படக்குழு அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் கவுதம் மேனன் தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அவரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கவுதம் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவரிடம் பலரும் லியோ அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

அதற்கு பதிலளித்த கவுதம், நீங்கள் லியோ அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருப்பது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த படம் பற்றி எதுவுமே பேசக்கூடாது என்று லோகேஷ் கூறிவிட்டார். ஆனால் படம் அற்புதமாக வந்துள்ளது என்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். விரைவில் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்குகிறது என்று தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படம் தொடர்பான அப்டேட், ஒவ்வொரு முறையும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. லியோ படக்குழுவை எங்கு பார்த்தாலும், அப்டேட் கேட்பது ரசிகர்களின் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

From Around the web