பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் கவுதம் வாசுதேவ் மேனன் !! 

 
பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் கவுதம் வாசுதேவ் மேனன் !!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சூரி, கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான வெற்றிமாறனின் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்து கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் இந்தப் படத்திற்கு இசையமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது.  மேலும் இந்தப் படத்தில் கவுதம் மேனன் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு போஸ்டரில் சூரி போலீஸ் உடையில் கம்பீரமாக நிற்கிறார். மறு போஸ்டரில் விஜய் சேதுபதி வில்லங்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். 

கௌதம் மேனன் சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் அதே வரிசையில் இந்த படத்திலும்  தனது  அபார நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web