ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு கோவையில் இம்மாதம் துவக்கம்!
Feb 11, 2025, 16:05 IST

கிருஷ்ணகுமார் ராம்குமார் என்பவரை எழுதி இயக்கம் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் கோவையில் துவங்க உள்ளது. 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தை இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
'இந்தியாவின் எடிசன்' என்று பெருமைக்கு சொந்தக்காரரான கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜி.டி. நாயுடுவாக
பிரபல நடிகர் மாதவன் நடிக்கின்றார்.