சொன்னபடி, சொன்ன தேதியில் வெளியாகும் புஷ்பா 2 கிளிம்ப்ஸ்..!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா இரண்டாம் பாகத்தின் கிளம்ப்ஸ் காட்சிகள் வரும் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
pushpa 2

கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

புஷ்பா படத்தின் ஒவ்வொரு பதிப்புகளும் பெரியளவில் ஹிட்டானது. இந்த படம் ரூ. 150 கோடி மதிப்பில் உருவாகி, ரூ. 350 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் நடப்பாண்டில் புஷ்பா இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் ஷூட்டிங் பணிகள், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 7-ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், அன்றைய நாள் படத்தின் கிளம்ப்ஸ் காட்சிகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, படத்தின் இயக்குநர் சுகுமாருக்கு,  இதுவரை எடுக்கப்பட்ட புஷ்பா 2-ம் பாகத்துக்கான ஷூட்டிங் பணிகள் திருப்தி அளிக்கவில்லெஇ என்றும், அதனால் படப்பிடிப்பு நிறுத்த அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால் இப்போது புஷ்பா 2 பணிகள் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 7-ம் தேதி மாலை 4.05 மணிக்கு புஷ்பா 2 கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சின்னதாக டீசர் தயார் செய்து, படக்குழு வெளியிட்டுள்ளது.
 

From Around the web