‘லியோ’ படம் பார்க்கும்போது 15 நிமிஷம் முன்னாடி போங்க : கவுதம் மேனன்..!

 
1

விஜய், திரிஷா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படம் வெளியான தியேட்டர்களில் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இன்னும் ஆன்லைனில் கூட வெளியாகாத இந்த ட்ரெய்லர் ‘லியோ’ படம் திரையிடுவதற்கு முன் திரையிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவுதம் மேனன் வெளியிட்டுள்ள வீடியோவில் ’லியோ’ படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு திரையரங்கிற்கு சென்று விடுங்கள் என்றும் அப்போது ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என்றும் கூறியுள்ளார் 

From Around the web