வென்டிலேட்டர் கிடைக்காததால் கோ பட நடிகையின் சகோதரர் காலமானார் !!

 
1

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் பியா பாஜ்பாய், பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து அஜித்தின் ’ஏகன்’, ஜீவாவின் ’கோ’, இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ’பொய் சொல்லப்போறோம்’, வெங்கட் பிரபுவின் ’கோவா’ உளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் தமிழில்  ‘அபியும் அனுவும்' என்கிற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை பியா பாஜ்பாயின் சகோதரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை ஒரு ட்வீட் போட்டார்.


உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மாவட்டத்தில் அவசரமாக உதவி தேவைப்படுகிறது. வென்டிலேட்டரும், பெட்டும் தேவை. என் சகோதரர் இறந்து கொண்டிருக்கிறார். யாராவது தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு யாராவது தெரிந்திருந்தால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9415191852 என்றார்.


 ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை போலிருக்கு. 2 மணிநேரம் கழித்து தன் சகோதரர் இறந்துவிட்டதாக வருத்தத்துடன் ட்வீட் போட்டார் .பியாவின் ட்வீட்டை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்துக் வருகின்றனர் 

From Around the web