அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் ‘நோ என்ட்ரி’ போடா முடியாது - எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ..!!

 
1

விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், அ.இ.த.வி.ம.இ அமைப்பு, நடிகர் விஜய் கட்டுப்பாட்டில் தான் செயல்படுவதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை உள்ளது உண்மைதான் நான் அதை மறுக்கவில்லை. விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவிற்கும் இடையில் எந்த மன கசப்பும் இல்லை.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என கூறி உள்ளார்.  தனது மகன் விஜய்யுடனான அவரது உறவை மேலும் மோசமாக்கும் சாத்தியம் கொண்ட அந்த செய்தியை மறுத்தார். சமீபத்தில் அவரிடம்  பேட்டி எடுத்த ஒரு தமிழ் வார இதழ் தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளதாக கூறினார்.

அந்த பேட்டியில்  நான் சொல்லாத ஒன்று இருந்தது. அதில் ஷோபாவும் நானும் விஜய்யின் வீட்டிற்கு வெளியே காத்திருக்கும்படி  கூறப்பட்டோம் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொன்னார், அதன் காரணமாக நானும் ஷோபாவும் (அவரை சந்திக்காமல்) திரும்பினோம் என கூறி இருப்பது உண்மை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆம், எனக்கும் விஜய்க்கும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், விஜய் மற்றும் ஷோபா இடையே எந்த கசப்பும் இல்லை. இருவரும் அடிக்கடி பேசுவார்கள், சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.


 

From Around the web