கோலிசோடா பட நடிகையின் தற்போதைய பரிதாப நிலை..!!

கோலிசோடா படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய சீதா, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
seetha

சென்னையை பூர்வீகமாக கொண்ட சீதாவுக்கு சினிமாவில் நடிப்பது பெரும் கனவாக இருந்தது. பல படங்களில் நடிக்க முயற்சி செய்தும், எதுவும் பலனிக்கவில்லை. மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்ததால், குடும்பத்தினரும் அவருடைய வருமானத்தை எதிர்பார்த்தனர்.

இந்நேரத்தில் கிடைக்கும் வேலையை செய்துகொண்டு, பகுதி நேரமாக சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார். ஒருவழியாக அவருக்கு மில்டன் கோலிசோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனால் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிவிடும் என்கிற நம்பிக்கையோடு நண்பர்களிடம் கூறியுள்ளார்.

samantha

ஆனால் அவர்களோ சீதாவை கிண்டல் செய்துள்ளனர். “உன் முகத்தை எல்லாம் யாரு பார்ப்பார்கள்” என்று கூறி கிண்டலடித்துள்ளனர். எனினும் சீதாவின் அம்மா, அவருடைய சினிமா கனவுகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இறுதியில் கோலிசோடா படத்தில் நல்லபடியாக நடித்து முடித்தார்.

படம் வெளியான போது சீதாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மில்டன் இயக்கத்தில் தயாரான 10 எண்றதுள்ள, மாயநதி போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது கோலி சோடா 1.5 என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். எனினும், தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை. பட வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

From Around the web