செம நியூஸ்..! ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம்..! 

 
1

கடந்த 2013ஆம்  ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம்’. மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் 72 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

இந்த படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சிங்களம், சீனா, இந்தோனேசியா, கொரியன் உள்பட பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆசிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ’த்ரிஷ்யம்’ திரைப்படம் அடுத்ததாக ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது

கல்ஃப் ஸ்ட்ரீம் என்ற நிறுவனம் ஹாலிவுட்டில்  ’த்ரிஷ்யம்’ படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபலமான நட்சத்திரங்கள்  மோகன்லால், மீனா கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

From Around the web