சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி ஒரே டிக்கெட் மூலம் மாதம் முழுவதும் படம் பார்க்கலாம்..!
இந்தியாவில் பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டாலும், தியேட்டரில் படம் பார்ப்பது என்பது தனி சந்தோசம் தரும். இந்நிலையில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு தியேட்டர்களில் படம் பார்ப்பதற்கு சப்ஸ்கிரிப்சன் வசதி கொண்டுவரப்பட இருக்கிறது.
இந்த வசதி வெளிநாடுகளில் இருந்தாலும் இந்தியாவில் இது தான் முதன்முறை. இந்த புதிய திட்டத்தை பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த சப்ஸ்கிரிப்சன் திட்டத்திற்கு பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட் (PVR INOX Passport) என பெயர். இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு மாதம் முழுவதும் ஐநாக்ஸ் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு முறை பணம் செலுத்தினால் போதும். இதற்கான சந்தா விலை ஒரு மாதத்திற்கு ரூ. 699 ரூபாய் மட்டுமே. இந்த திட்டத்தில் இணையும் போது முதல் மூன்று மாதங்களுக்கு சந்தாதாரராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக சில நகரங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கிறது.