மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட 10 இயக்குநர்கள் செய்த நல்ல காரியம்..!
 

 
தமிழ் சினிமா இயக்குநர்கள்
தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற்ற படைப்பாளிகளாக இருக்கும் 10 முன்னணி இயக்குநர்கள் ஒன்றுசேர்ந்து ‘ரெயின் ஆன் ஃப்லிம்ஸ்’ என்கிற பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புதுமைகள் நடப்பதுண்டு. அந்த வகையில் இப்போது ஏற்பட்டுள்ள புதுமை கோலிவுட் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, வெற்றிமாறன், மிஷ்கின், சிசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 10 இயக்குநர்கள் இணைந்து புதிய படத் தயாரிப்பு
நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

அதன்படி இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது. எதற்காக தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை துவங்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.

From Around the web