நடிகர் விவேக் நினைவாக மாநாடு படக்குழு செய்த நல்ல காரியம்..!

 
நடிகர் விவேக் நினைவாக மாநாடு படக்குழு செய்த நல்ல காரியம்..!

மாரடைப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநாடு படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளது பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய திடீர் மரணம் திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்நிலையில் முன்னாள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது தீவிரமாக பற்று வைத்திருந்த விவேக், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கள சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். 

அவர் வாழ்ந்த வரை பல்வேறு தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டார். மீதமுள்ள மரக்கன்றுகளை நடுவதற்குள் நடிகர் விவேக் காலமாகிவிட்டார். அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் மரக்கன்றுகளை நட்டுவைத்து வருகின்றனர்.

அந்த வகையில் சிம்பு நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

From Around the web