கூகுள் குட்டப்பன் டீசர் வெளியீடு..!

 
கூகுள் குட்டப்பன் டீசர்

கூகுள் குட்டப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து, தற்போது சமூகவலைதளங்களில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் போடுவாள் இயக்கத்தில் வெளியான படம் ஆண்டுராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. சுராஜ் வெஞ்சரமூடு, சௌபீன் ஷாகிர், கெண்டி ஜிர்டோ என்கிற ஜப்பானிய நடிகை உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

திரையரங்குகளில் நேரடியாக வெளியான இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் எழுந்தன. அதை தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியான பிறகு இந்திய ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். இதனுடைய தமிழ் ரீமேக்கை உரிமையை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கைப்பற்றினர்.அதை தொடர்ந்து இந்த படம் தமிழிலும் தயாராக தொடங்கியது. பிக்பாஸ் பிரபலங்களாக தர்ஷன் மற்றும் லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், கே.எஸ். ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

அவரிடம் பல படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரி  மற்றும் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இதனுடைய முதல் பார்வை போஸ்டரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டார். படத்தில் யோகிபாபு, மனோபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.

கூகுள் குட்டப்பன் என்கிற பெயரில் தயாராகியுள்ள படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்பு கூறி வருகின்றனர்.

From Around the web