புனித் ராஜ்குமாருக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிய கர்நாடக அரசு..!!

 
1

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் 1975ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ராஜ்குமார் - பர்வதம்மா ஆகியோரின் மகனாக பிறந்த அவர், கடந்த 2002ம் ஆண்டு ‘அப்பு’ என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானதால், ரசிகர்களால் அப்பு என அழைக்கப்பட்டார்.

29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ள புனித், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல தளங்களில் பணிபுரிந்தவர். நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது இறுதி சடங்கிற்கு நேரில் வந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை புத்த ராஜ் முகத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்திருந்தார். குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.கர்நாடகாவின் முன்னணி நடிகரான அவரது நினைவிடம் அமைந்துள்ள காண்டிவரா மைதானத்தில் தொடர்ச்சியாக இப்போதும்கூட ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

1

புனித தனது வாழ்நாள் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை இலவச கல்வி, முதியோர் இல்லம், ஏழைகளுக்கு உதவி என தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார். சத்தமே இல்லாமல் இவர் செய்த பல நல்ல காரியங்கள் புனித்தின் மரணத்திற்கு பின்னரே  வெளி உலகிற்கு தெரியவந்தது.

அதோடு, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால் கடந்த 15 நாட்களில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் கண்தானம் செய்துள்ளனர். இந்த நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான ’கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

From Around the web