என்னப்பா சொல்றீங்க... இது ஜி.பி முத்துவா? ஆளே அடையாளம் தெரியல...  

 
1

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தார். நாளுக்கு நாள் இவரின் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து பல லட்சங்களை தாண்டியது. இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார்.தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத் தொடங்கின.கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் ஆனது. ஜி.பி முத்து இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சில காரணத்தால் திடீரென தானாக நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.

தற்போது ஜி.பி முத்து 'ஆர்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த போஸ்டரை ஜி.பி.முத்து தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

From Around the web