சொந்தமாக ஆடம்பர பிஎம்டபுள்யூ காரை வாங்கிய ஜி.பி. முத்து..?

 
பி.எம்.டபுள்யூ காருடன் ஜி.பி. முத்து

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி. முத்து புதியதாக பிஎம்டபுள்யூ கார் சொந்தமாக வாங்கியுள்ளதாக கூறி சில புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

இந்தியாவில் டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில், தமிழ்நாட்டில் அதிகமானோருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜி.பி. முத்து. நெல்லை தமிழில் இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது பார்க்கும் மரக்கடை ஒன்றை வைத்துள்ளார். பொழுதுப்போக்காக டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிட ஆரம்பித்தவர், ரசிகர்களின் வரவேற்பால் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட தொடங்கினார்.

அந்த நேரத்தில் இந்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், பிரதமர் மோடிக்கு மீண்டும் டிக்டாக் செயலியை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் மூலம் நாடு மக்களிடம் கவனமீர்த்தார். எனினும், தற்போது பிரபலமாக இருக்கும் வீடியோ செயலிகளில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

கடந்தாண்டு  கொரோனா காரணமாக தொழில் முடங்கியதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் திடீரென தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இதன்மூலம் மறந்துபோன ஜி.பி. முத்து மீண்டும் தமிழக மக்களின் நினைவுகளுக்கு வந்தார்.

அதை தொடர்ந்து அவர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை வைத்து பலரும் வீடியோ பதிவிட தொடங்கினர். இதை அவரை மேலும் பிரபலமாக்கியது. இதன்மூலம் சினிமா வாய்ப்புகளும் டிவி நிகழ்ச்சி வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. தற்போது சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்து ஜி.பி. முத்து நடிக்கிறார்.

இந்நிலையில் புதியதாக அவர் பிஎம்டபுள்யூ சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த காருடன் ஸ்டைலான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ள ஜி.பி.முத்து, அதை சமூக  வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  ஜி.பி.முத்து கார் வாங்கிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  கடந்த ஏப்ரல் மாதம் புதியதாக ஹூண்டாய் காரை அவர் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web