பிக்பாஸ் சீசன் 5-க்குள் நுழையும் ஜி.பி. முத்து- இன்ஸ்டாவில் உறுதிசெய்த விஜய் டிவி..!!
 

 
ஜி.பி. முத்து


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள பதிவின் மூலம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி. முத்து இடம்பெறலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான  ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. தற்போது போட்டியாளர்களை இறுதி செய்யும் பணியில் நிகழ்ச்சிக்குழு ஈடுபட்டுள்ளது.

இதுதான் உத்தேச போட்டியாளர்களின் பட்டியல் என்கிற பெயரில் சமூகவலைதலங்ளில் பல்வேறு செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. இதன்மூலம் ரசிகர்களுக்கு பிக்பாஸ் புதிய சீசன் மீது இருக்கும் ஆர்வம் விஜய் டிவிக்கு தெரியந்துள்ளது.தற்போது  அதை இன்னும் தூண்டிவிடும் அகையில் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் வணக்கம் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளது. இது டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவின் பிரபல வசனமாகும்.

இதனால் நெட்டிசன்கள் பலரும் ஜி.பி. முத்து பிக்பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக இடம்பெறுகிறார் என கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஜி.பி. முத்து விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி சீசந்3’ல் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From Around the web