மஹான் துருவ் விக்ரம் போஸ்டர்- ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்..!

 
த்ருவ் விக்ரம்

மஹான் படத்திற்காக புதியதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் துருவ் விக்ரமின் கெட்-அப் ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் ‘மஹான்’. இதில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விநாயகர் சதுர்ர்த்தியை முன்னிட்டு படத்தில் மற்றொரு கதாநாயகனான துருவ் விக்ரம் போஸ்டர் வெளியாகியுள்ளது. மிரட்டலான வீடியோவுடன் வெளியாகியுள்ள போஸ்டருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது. படத்தில் அவருடைய கெட்-அப் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

சென்னை, கோவா, டார்ஜிலிங் என பல்வேறு பகுதிகளில் இந்த படத்துக்கான ஷுட்டிங் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web