இந்திய சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

 
1

மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம் . இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்ப்பட்ட வெற்றியை பெற்றது.

முதல் பாகம் கொடுத்த வெற்றியால் அடுத்த சில ஆண்டிகளில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி தாறுமாறான வெற்றியை ருசித்தது .இந்நிலையில் இந்த இரண்டு பாகங்களும் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது.

த்ரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

ஒரு இந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் செம ஆவலாக உள்ளனர் .

From Around the web