சமந்தா சொன்ன வாழ்த்து; லேட்டாக ரியாக்ட் செய்த நாக சைத்தன்யா..!

 
சமந்தா மற்றும் நாக சைத்தன்யா
கணவர் நாக சைத்தன்யாவை விவகாரத்து செய்ய சமந்தா முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ள சூழலில், அதை உறுதி செய்யும் விதமாக சமூகவலைதளத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தில் நாக சைத்தன்யா ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

அதற்கான ப்ரோமோஷன் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியானது. அதை ட்விட்டர் நடிகர் நாக சைத்தன்யா ட்வீட் செய்திருந்தார். அதை ரீட்வீட் செய்த சமந்தா சாய் பல்லவியை மட்டும் டேக் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு உடனடியாக நன்றி கூறாத நாக சைத்தன்யா, கடந்த 14-ம் தேதி காலை சமந்தாவுக்கு அவர் நன்றி கூறினார். இதனால் நாக சைத்தன்யா மற்றும் சமந்தாவிடையே பிரிவு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் இருவரும் வெளிப்படையாக இந்த செய்தியை குறித்து மவுனம் கலைக்கும் வரையில், தொடர்ந்து விவகாரத்து செய்திகள் சுற்றிக்கொண்டே இருக்கும் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

From Around the web