சாணிக் காயிதம் படப்பிடிப்பு முடிந்தது- படக்குழு வெளியிட்ட குரூஃப் போட்டோ..!

 
சாணிக் காயிதம் படக்குழு
இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக் காயிதம்’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளவர் அருண் மாதேஸ்வரன். அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வெளியாவதற்குள் அருண் மாதஸ்வரன் இயக்கி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இந்த படத்தில் முதன்முறையாக இயக்குநர் செல்வராகவன் நடிகராக கால்பதிக்கிறார். அவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இப்பட போஸ்டர் ஏற்கனவே சமூகவலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமூகவலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள இயக்குநர் செல்வராகவன், “சாணிக் காயிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அது ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. படத்தின் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

From Around the web