ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன்..?

 
1

மின்சாரம், மின்னணுவியல், ஆட்டோமொபைல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணராக விளங்கிய ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று தொழில்நுட்ப உலகம் குறிப்பிடுகிறது.  ஜி.டி. நாயுடு என்று உலகளவில் அறியப்பட்ட இவர், எண்ணற்ற கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இந்தியாவின் பொறியியல் வரையறைகளை மாற்றியமைத்த அறிஞரான ஜி.டி. நாயுடு முறையான பொறியியல் கல்வி பெறாதவர். புதுமையான தொழில்முனைவுகளால் ‘ஸ்டார்ட் அப்’ பண்பாட்டை நாட்டில் பதியமிட்ட தொழில்நுட்பத் தலைமகன் இவர்தான்.

ஷேவிங் ரேஸர் முதல் எல்க்ட்ரிக் மோட்டார் வரை பல்வேறு புரட்சியான கண்டுப்பிடிப்புகளுக்கு சொந்தக்காரரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. அதில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். 

மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், ஜி.டி. நாயுடு படத்தை மாதவன் இயக்கவும் செய்வார் என தகவல்கள் கூறப்படுகின்றன.

முன்னதாக மாதவன் நடிப்பில் ராக்கெட்டரி - தி நம்பி எஃபெக்ட்ஸ் என்கிற படம் வெளியானது. இது இஸ்ரொவின் முன்னாள் தலைவரும் தமிழருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த படம் உலக திரை ஆர்வலர்களிடையே மிகப்பெரிய பாராட்டுதல்களை பெற்றது. இந்த படத்தின் ஹீரோ மட்டுமில்லாமல், பட இயக்குநரும் மாதவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web